"வெல்லப்பாகு வாசம் எழுப்பியது.
மாவு வழித்துப் பளபளக்கும் குழவி.
திருப்பிப்போட்ட பணியாரத்தின்
'சுர்ர்ர்' சத்தம்.
இருள்போல் கரிபடிந்த அடுப்படி
ஊதாங்குழல் ஊத
கிளம்பும் புகையில்
கனிந்த உன் கண்கள்
மினுங்கும் ஐயா.
சூடு தாளாமல் கம்பியில்
குத்துப்பட்டுச் சாகும்
பணியாரங்கள்.
மீந்த பாகு சட்டியில்
பணியாரம் தோய்க்க
இளகுகிறது கனவு.
காலச்சக்கரமாய் ஆட்டுக்கல்லைப்
பின்னோக்கி ஆட்டுகிறேன்.
வழவழத்து நழுவுகிறது
குழவி.!!"
-அன்றில்
மாவு வழித்துப் பளபளக்கும் குழவி.
திருப்பிப்போட்ட பணியாரத்தின்
'சுர்ர்ர்' சத்தம்.
இருள்போல் கரிபடிந்த அடுப்படி
ஊதாங்குழல் ஊத
கிளம்பும் புகையில்
கனிந்த உன் கண்கள்
மினுங்கும் ஐயா.
சூடு தாளாமல் கம்பியில்
குத்துப்பட்டுச் சாகும்
பணியாரங்கள்.
மீந்த பாகு சட்டியில்
பணியாரம் தோய்க்க
இளகுகிறது கனவு.
காலச்சக்கரமாய் ஆட்டுக்கல்லைப்
பின்னோக்கி ஆட்டுகிறேன்.
வழவழத்து நழுவுகிறது
குழவி.!!"
-அன்றில்
No comments:
Post a Comment