Saturday, 9 August 2014





"சீமைக்கருவை மரமொன்றின்
பச்சைப்பாம்பாய் தொங்கும்
இளம்பச்சை காய் ஒதுக்கி,
நறுக்கிய அணில்வால் போன்ற
அதன் பூப்பறித்தேன்.
மெதுமெதுப்பான மஞ்சள்
மகரந்த கொத்தை,
காம்பிலிருந்து உருவி
உள்ளங்கையில் குவித்து ஊத
இவ்வெளியெங்கும் பெய்யும்
மஞ்சள் மழையில்
நனைகிறேன்
ஒரு வெல்வெட்பூச்சி போல.!!"

-அன்றில்

No comments:

Post a Comment