"எல்லாவற்றுக்கும் காலமே தீர்வு என்பதில்
தீர்க்கமாயிருக்கிறார்கள்.
காலமே மருந்தாம்
மருந்தே காலமாம்
மனப்புண்ணில் காலம் களிம்பு தடவுமாம்
நம்புகிறார்கள்.
காலம் அதன் கணக்கில் சம்பவங்களை
கோத்துக்கொண்டே செல்கின்றது.
கோட்டை அழிக்காமல் சின்னதாக்கும் வித்தை போல
காலம் அடுத்தடுத்த காயங்களை
ஏற்படுத்திக்கொண்டே போகின்றது.
எப்போதும் அழுகிறவர்கள் பழையதை மறந்து,
புதுப்புது காரணங்களுக்காக
அழத்தொடங்குகின்றனர்.
காலங்கள் மாறும்போது
காயங்கள் மாறுகின்றன.
பழையன காலாவதியாகின்றன
புதிய துன்பங்களை
புதுப்பிக்கும் போது.!!"
-அன்றில்
தீர்க்கமாயிருக்கிறார்கள்.
காலமே மருந்தாம்
மருந்தே காலமாம்
மனப்புண்ணில் காலம் களிம்பு தடவுமாம்
நம்புகிறார்கள்.
காலம் அதன் கணக்கில் சம்பவங்களை
கோத்துக்கொண்டே செல்கின்றது.
கோட்டை அழிக்காமல் சின்னதாக்கும் வித்தை போல
காலம் அடுத்தடுத்த காயங்களை
ஏற்படுத்திக்கொண்டே போகின்றது.
எப்போதும் அழுகிறவர்கள் பழையதை மறந்து,
புதுப்புது காரணங்களுக்காக
அழத்தொடங்குகின்றனர்.
காலங்கள் மாறும்போது
காயங்கள் மாறுகின்றன.
பழையன காலாவதியாகின்றன
புதிய துன்பங்களை
புதுப்பிக்கும் போது.!!"
-அன்றில்
No comments:
Post a Comment