Saturday, 9 August 2014

"நாளை பறிக்கலாம் எனப் பார்த்து வைத்த
சிவப்பு கொய்யாப்பழத்தை
கொறிக்கிறது குட்டி அணில்.
அதன் பூக்காலத்திலிருந்தே
முத்தமிட்டு உறவாடிய
சிநேகம் அதுக்கு.
பழமுண்ட அணில் முழுக்கொய்யாவாக
கனிநுனி பூச்சருகாகும் வால்.
பழமுண்ட திருப்தி எனக்கு.!!"

-அன்றில்

No comments:

Post a Comment