Friday, 1 August 2014

"ஏனோ ஒரு பாடல் உன்னை நினைவுப்படுத்துகிறது
வெறுமையின் வெம்மை அதிகமாக,
ஆள்அரவமற்ற கோடைக்காலப் பெரும்
பொட்டல் நினைவிலாடுகிறது.
இனி எப்போதும் நிகழ்வதற்கான
சாத்தியக்கூறுகளற்ற வாழ்க்கை.
அடுத்தடுத்த வரிகளுக்கிடையில் கனவிலாவது
வாழ்ந்து தொலைக்க வேண்டியுள்ளது.
வறண்ட மனதில் கனவுகளுக்கு பஞ்சமில்லை.!!"

-அன்றில்

No comments:

Post a Comment