“ஆதிகாலத்தில் நாம் அன்றில்களாயிருந்தோம்.
நமது சிறகின் நீலத்திலிருந்து
பெருகி வியாபித்திருந்த வானத்தில்
பறந்து பறந்துத் தீர்த்தோம்
சிறகுகள் ஓயும்வரை.
ஆதிமழையின் முதல்துளியை
அலகால் பிடித்து எனக்கூட்ட
என் சிறகசைப்பில் வெட்டியது மின்னல்.
நமது கூடலால் எழுந்த வெப்பத்தைக் கடத்தி
பகுதிப்பாலையாக்கினாய் புவியை.
என் சிறகுகளின் அணைவில்
நீ சிறகுலர்த்தியபோது தோன்றிய தீயில்
பற்றியெரிந்தது காடு.
நாம் ஆடிப் பாடினோம்
காதலின் தொன்மப் பாடலை.
நமது காதலின் கதையை
நீ சொல்லக் கேட்டு வெட்கப்பட்ட
ஏவாள் கையிலிருந்தது கடித்த ஆப்பிள்.
எனக்காக நீ வடித்த கண்ணீர்
கடலாய் பெருகியதென ஆதாம்
கடிந்துகொண்டான்.
இமயக்கல்லின் மீது தனித்திருக்கவிட்டு
இரைதேடிச் செல்லுமுன்
நீ கேட்டுக்கொண்டாய்
வரும்வரை உயிர் மாயாமல்
தனித்திருக்கவேண்டுமென.
இலைகளாய் காலம் உதிர உதிர,
கண்டங்கள் நகர நகர
பரிணாமித்தது பூமி.
காத்திருப்பின் துயரம் வடிவதாயில்லை.
ஏகாந்த மேகத்தினுள் முகம் புதைத்து
அழவேண்டும் போலிருக்கிறது.
இமயமுகட்டில் காத்திருக்கின்றேன்
தனியொரு அன்றிலாய்
காதலின் தொன்மப் பாடலை
பாடியபடி.!!”
நமது சிறகின் நீலத்திலிருந்து
பெருகி வியாபித்திருந்த வானத்தில்
பறந்து பறந்துத் தீர்த்தோம்
சிறகுகள் ஓயும்வரை.
ஆதிமழையின் முதல்துளியை
அலகால் பிடித்து எனக்கூட்ட
என் சிறகசைப்பில் வெட்டியது மின்னல்.
நமது கூடலால் எழுந்த வெப்பத்தைக் கடத்தி
பகுதிப்பாலையாக்கினாய் புவியை.
என் சிறகுகளின் அணைவில்
நீ சிறகுலர்த்தியபோது தோன்றிய தீயில்
பற்றியெரிந்தது காடு.
நாம் ஆடிப் பாடினோம்
காதலின் தொன்மப் பாடலை.
நமது காதலின் கதையை
நீ சொல்லக் கேட்டு வெட்கப்பட்ட
ஏவாள் கையிலிருந்தது கடித்த ஆப்பிள்.
எனக்காக நீ வடித்த கண்ணீர்
கடலாய் பெருகியதென ஆதாம்
கடிந்துகொண்டான்.
இமயக்கல்லின் மீது தனித்திருக்கவிட்டு
இரைதேடிச் செல்லுமுன்
நீ கேட்டுக்கொண்டாய்
வரும்வரை உயிர் மாயாமல்
தனித்திருக்கவேண்டுமென.
இலைகளாய் காலம் உதிர உதிர,
கண்டங்கள் நகர நகர
பரிணாமித்தது பூமி.
காத்திருப்பின் துயரம் வடிவதாயில்லை.
ஏகாந்த மேகத்தினுள் முகம் புதைத்து
அழவேண்டும் போலிருக்கிறது.
இமயமுகட்டில் காத்திருக்கின்றேன்
தனியொரு அன்றிலாய்
காதலின் தொன்மப் பாடலை
பாடியபடி.!!”
-அன்றில்
No comments:
Post a Comment