"பெரிய லண்டியன் விளக்கு
பாட்டைய்யா வாங்கினது.
அதன் மேற்பகுதி உயர்த்தி
கிளாஸை கவிழ்த்து
அதை ஏற்றியவுடன்
உயிர்ப்பித்த நிறைவு.
அதன் ஒளியில் பார்த்த
உலகம் அத்தனை அழகு.
அய்யாவுக்கு ஏனோ ஐந்துகட்டை
டார்ச்லைட் பிடிக்கவில்லை.
எப்போதும் அவர் கட்டிலின் கீழே
இரவெல்லாம் மினுங்கும் அது.
கூட்டுவண்டியில் மாடுகளின் ஜல்ஐல்லிற்கு
அரைவட்டமாக அது ஆடுவது ரம்மியம்.
ஐயா,பாட்டைய்யாவின் தலைமாட்டில் எரியும்போது
அவர்களின் மூச்சு உலாவுகிறது
முட்டைவடிவ கண்ணாடிக்குள்.
பொத்தானை அழுத்தியவுடன் எரியும்
மின்சார விளக்கில் எரிவது
உயிர்ப்பிழந்த நமது வாழ்வு.!!"
-அன்றில்
பாட்டைய்யா வாங்கினது.
அதன் மேற்பகுதி உயர்த்தி
கிளாஸை கவிழ்த்து
அதை ஏற்றியவுடன்
உயிர்ப்பித்த நிறைவு.
அதன் ஒளியில் பார்த்த
உலகம் அத்தனை அழகு.
அய்யாவுக்கு ஏனோ ஐந்துகட்டை
டார்ச்லைட் பிடிக்கவில்லை.
எப்போதும் அவர் கட்டிலின் கீழே
இரவெல்லாம் மினுங்கும் அது.
கூட்டுவண்டியில் மாடுகளின் ஜல்ஐல்லிற்கு
அரைவட்டமாக அது ஆடுவது ரம்மியம்.
ஐயா,பாட்டைய்யாவின் தலைமாட்டில் எரியும்போது
அவர்களின் மூச்சு உலாவுகிறது
முட்டைவடிவ கண்ணாடிக்குள்.
பொத்தானை அழுத்தியவுடன் எரியும்
மின்சார விளக்கில் எரிவது
உயிர்ப்பிழந்த நமது வாழ்வு.!!"
-அன்றில்

No comments:
Post a Comment