"வீட்டுக்கார ஆச்சி வந்தாள்
கொல்லைப்புறத்துக்கு,
செம்பருத்தி பறித்துப் போகவென.
ஒரு கணம் நின்று
கண்கள் விரிய,
கரும்பச்சை இலைதடவி,
சிவந்த மெல்லிய பூவிதழ்
ஸ்பரிசித்தாள்.
செடியிலே பூவை விட்டு
திரும்பிப் போகையில்,
ஆச்சி கண்களில் பூத்திருந்தது
செம்பருத்தி.
அம்மா சொல்லியிருந்தாள்,
பதின்ம வயதில் தூக்கு மாட்டிக்கொண்ட,
ஆச்சியின் மகள் பெயர்
'செம்பருத்தியென'.!!"
-அன்றில்
கொல்லைப்புறத்துக்கு,
செம்பருத்தி பறித்துப் போகவென.
ஒரு கணம் நின்று
கண்கள் விரிய,
கரும்பச்சை இலைதடவி,
சிவந்த மெல்லிய பூவிதழ்
ஸ்பரிசித்தாள்.
செடியிலே பூவை விட்டு
திரும்பிப் போகையில்,
ஆச்சி கண்களில் பூத்திருந்தது
செம்பருத்தி.
அம்மா சொல்லியிருந்தாள்,
பதின்ம வயதில் தூக்கு மாட்டிக்கொண்ட,
ஆச்சியின் மகள் பெயர்
'செம்பருத்தியென'.!!"
-அன்றில்
No comments:
Post a Comment