"இரவுநேர ஜன்னலோர
பேருந்துப் பயணம்
அலாதி சுகம்.
பெயரறியா ஊரைக் கடக்கும் போது
அந்த சோடியம் விளக்கின் மஞ்சள் ஓளியில்,
வைரப்பொடியாய் மழைச்சாரல்
முகத்தில் விழும்போது,
கதவடைத்த வீடுகளையும்,
வாசலில் எரியும் சூடத்துடன்
மூடப்பட்ட கடைகளையும்,
பார்க்கையில்
பகலில் காணாத தனி அழகுடன்
உங்களுடன் அவை ஏதோ
பேச முயலும்போது
அவ்வூரின் பெயர் புதிதாய்
என்ன தந்திடும்?
காதில் நிறையும் இன்னிசையால்
கொடியிலே மல்லிக்கைப் பூவாய்
மணக்கும் மனதைக் கொண்டு
என்ன செய்ய?
உன்மத்தமேறி மிதக்கிறேன்
ஏகாந்தவெளியில் சிறு இறகாக."!"
-அன்றில்
பேருந்துப் பயணம்
அலாதி சுகம்.
பெயரறியா ஊரைக் கடக்கும் போது
அந்த சோடியம் விளக்கின் மஞ்சள் ஓளியில்,
வைரப்பொடியாய் மழைச்சாரல்
முகத்தில் விழும்போது,
கதவடைத்த வீடுகளையும்,
வாசலில் எரியும் சூடத்துடன்
மூடப்பட்ட கடைகளையும்,
பார்க்கையில்
பகலில் காணாத தனி அழகுடன்
உங்களுடன் அவை ஏதோ
பேச முயலும்போது
அவ்வூரின் பெயர் புதிதாய்
என்ன தந்திடும்?
காதில் நிறையும் இன்னிசையால்
கொடியிலே மல்லிக்கைப் பூவாய்
மணக்கும் மனதைக் கொண்டு
என்ன செய்ய?
உன்மத்தமேறி மிதக்கிறேன்
ஏகாந்தவெளியில் சிறு இறகாக."!"
-அன்றில்
No comments:
Post a Comment