"இடைவார் கட்டாத தாத்தாவை நான் பார்த்ததில்லை.லேசாக அழுக்கு படிந்த பச்சையில், தோலாடு தோலாக இடைவார் கட்டிய தாத்தா அழகு.சிலரை சிலபொருட்களின்றி உருவகித்துப் பார்க்க முடிவதில்லை. பாட்டியை அந்த வெத்தலைப் பெட்டியும்,பித்தளை எச்சிப்பணிக்கமுமின்றி.தாத்தாவை அந்த பச்சை சிங்கப்பூர் இடைவாரும்,காதிபவன் கதர்த்துண்டுமின்றி நினைத்தல் சிரமம். முதன்முதலாக தாத்தா இல்லாமல், இடைவாரை தொடுகையில், மனசில் முழுஉருவமும் அகப்பட்டது.சின்னக்கழலை உள்ள அவர் வயிற்றை ஸ்பரிசித்த உணர்வு.பொருட்களால் எல்லாம் முடிகிறது. எச்சிப்பணிக்கம் அருகே,கதர்த்துண்டில் பொதிந்து வைத்தேன் வெத்தலைப்பெட்டியையும்,இடைவாரையும்.!!"
No comments:
Post a Comment