“பெயரறியா இவ்வூரின் பேருந்து நிலைய
சாக்கடையோரம் ஈ மொய்க்கப்
படுத்திருப்பவர் பால்ராசு.
பால்பண்ணை வைத்திருந்ததால்
பால்ராசு ஆனார் ராசய்யா.
எங்கூர் மக்களுடம்பில் நிறைந்திருக்கும்
நீர்ச்சத்து இவர் புண்ணியம்.
இரத்தம் அடர்வாய் இருப்பது
நல்லதில்லையென்பார்.
மடுவற்றியபின் எல்லாம் அடிமாடாய்
உண்ணியாய் உறிஞ்சிப் பிழைக்குமவர் வாழ்வு.
மீனாள் அத்தைக்கு பாலூறும் மனது.
தன்மார் ஊறவில்லையேயென இறுதிவரை
ஏக்கம்.
ஏதோவொன்றில்லையென்பது ஏதோவொன்றாய்
இருப்பதில்லை.
ஏதோவொன்று தான் வாழ்வின் நிறைவு.
ஏதோவொன்று தான் வாழ்வின் சூன்யம்.
முற்றும் இழந்து, மூட மறந்து
சித்தம் பிறண்டு, ஈமொய்க்கக் கிடப்பவரை
நக்கிக்கொடுக்கும் பசுவிற்கு தெரியுமா?
அடிமாடாய் போன தாயை விற்றவர்
இவரென.!!”
-அன்றில்
சாக்கடையோரம் ஈ மொய்க்கப்
படுத்திருப்பவர் பால்ராசு.
பால்பண்ணை வைத்திருந்ததால்
பால்ராசு ஆனார் ராசய்யா.
எங்கூர் மக்களுடம்பில் நிறைந்திருக்கும்
நீர்ச்சத்து இவர் புண்ணியம்.
இரத்தம் அடர்வாய் இருப்பது
நல்லதில்லையென்பார்.
மடுவற்றியபின் எல்லாம் அடிமாடாய்
உண்ணியாய் உறிஞ்சிப் பிழைக்குமவர் வாழ்வு.
மீனாள் அத்தைக்கு பாலூறும் மனது.
தன்மார் ஊறவில்லையேயென இறுதிவரை
ஏக்கம்.
ஏதோவொன்றில்லையென்பது ஏதோவொன்றாய்
இருப்பதில்லை.
ஏதோவொன்று தான் வாழ்வின் நிறைவு.
ஏதோவொன்று தான் வாழ்வின் சூன்யம்.
முற்றும் இழந்து, மூட மறந்து
சித்தம் பிறண்டு, ஈமொய்க்கக் கிடப்பவரை
நக்கிக்கொடுக்கும் பசுவிற்கு தெரியுமா?
அடிமாடாய் போன தாயை விற்றவர்
இவரென.!!”
-அன்றில்
No comments:
Post a Comment