Saturday, 16 August 2014

“தும்பியின் கண்ணாடிச்சிறகுகளின் வழியே
 உன் அன்பின் ஒளி
 சிதறுகிறது.
 மழைவில்லின் வண்ணம் கொண்டு
 நிரப்பிய கனாக்கள்
 வெளிறத் தொடங்குகிறது.
 குளிர்ந்த கூழாங்கல்லாய்
 இதயம் சுற்றிய நினைவுகள்
 தகிக்கும் பாலையின் பொன்மணலாய்
 வெடித்துச்சிதறும்.
 உன்மார்பில் பட்டுடைந்துத் தெறிக்கும்
 மழையின் ஸ்படிக மணிகள்,
 உறைவாளாய் இறங்கும் நெஞ்சில்.
 சருகுகளின் மேல் பாம்பாய்
 சரசரக்கும் உன் வழவழப்பின்
 மின்னல் வெட்டும் நடுமுதுகில்.
 கொண்டை முடிச்சவிழ்ந்து
 நீர்வீழ்ச்சியாய் சரியும் கூந்தலின்
 கருமை ஏந்திய கோப்பையை
 தவறவிட்டேன்.
 யாருமற்ற கடற்கரையில்
 காற்றில் படபடத்துச் செல்லும்
 உன் கைக்குட்டையை
 துரத்தும்
 வண்ணத்துப்பூச்சி நான்.!!”

      -அன்றில்



No comments:

Post a Comment