Sunday, 24 August 2014

“அவள் மூச்சுக்காற்றின் வெம்மை சூழ,
வனாந்திர தனிமையுள் நிற்கிறேன்.
கூட்டுப்புழுவாய் சுருங்கிய அவளை
தைலம் தேய்த்து கால் நீவி,
தாலாட்டுப் பாடிப் படுக்க வைத்திருந்தேன்.
சூரியகாந்தி நிறைந்த தோட்டத்தில்
பட்டாம்பூச்ச்சியாய்
பறந்து திரிந்தவள்.
இடதுமுலை சப்புகையில்
இறந்து போன தாயிடமிருந்து 
எனைத் தூக்கி நடக்கையில்
தன் இறக்கைகளை பிடுங்கிப் போட்டிருந்தாள்.
வரி விழுந்த நெற்றியை
எனக்காக சுரக்காமல் தொய்ந்த முலைகளை
வெதுவெதுப்பான வயிற்றை
தடவுகையில்
மெலிந்த கையினால் பிடித்து
கண்ணை மூடித்திறக்கிறாள்.
சிமிட்டல் பேசியது எல்லாம்.
நாளை இவள் மாருறிஞ்சி பூக்கும்
சூரியகாந்திப் பூக்கள்.
நான் பறப்பேன் வண்ணத்துப்பூச்சியாய்
மனோகர மஞ்சளுக்கிடையில்.!!”

-அன்றில்

No comments:

Post a Comment