Saturday, 16 August 2014

“தாத்தா செருப்பு போடுவதில்லை.
முள்ளெடுக்க, முள்ளுவாங்கியுடன்
அமர்ந்தேன் அவர்முன்.
முட்களும், சிலாம்புகளும்
சமாதி அடைந்த கால்கள்.
நடந்து நடந்து தேய்த்த பூமி
மேல்தோலாய் காய்த்திருந்தது.
மண்ணுடன் பேசிய வார்த்தையெல்லாம்
தூசியாய் அப்பியிருந்தது.
இற்றுப்போன நகத்துடன், வெடிப்புகளாய்
ஒரு சிறு தேக்கந்துண்டு போன்ற பாதம்.
வெடிப்பின் பள்ளத்தினூடே ஓடுகிறது
வற்றிய எங்களூர் ஆறு.
அலையடிக்கும் கடலின் நுரை
முகத்தில் தெறிக்கிறது.
எல்லா முட்களும் வலிப்பதில்லை
வாழ்விலும்.
ஊக்கினால் தசை விலக்கி விலக்கி
வலிக்கும் முள் பிடுங்க,
கண்கள் சுருங்கிப் பார்க்கும்
குழந்தை முகம்.
சிறு இரத்தமென கசிகிறது
உழுத வயலும்
வேட்டையாடிய காடும்
பழகிய பாதையும்
ரேகையின் வழியே.
மண்ணை சிநேகித்து,
பெருவாழ்வு வாழ்ந்த மரத்தின்
வேரை முத்தமிடத் தோன்றுகிறது.!!”

-அன்றில்

No comments:

Post a Comment