Friday, 1 August 2014

"என் கையை அளாவும் காற்று
அறிந்திருக்குமா?
அதன் தனிமையை.
அதற்கு நினைவிருக்குமா?
நம் விரல்கள் பின்னக்கோத்து
இருந்த கைகளுக்குள் உட்புக
நினைத்து முடியாததை.
அது உணர்ந்திருக்குமா?
இறுக்கத்தினால் வேர்த்த கைகளில்
அது ஏற்படுத்திய சிலுசிலுப்பை.
எதுவும் நினைவில்லாத,
உணர்ந்திராத புதுக்காற்றாய்
இப்போது வீசுகிறதா?
அதற்குத் தெரியாமல் போகுமா?
கடலிற்கு முன்னால் இந்தக்
கண்ணீரின் கரிப்பு.
முகத்தில் பட்ட காற்றின் வருடலால்
மெய்மறந்து கண்ணை மூட,
மூடிய கையினுள் தோன்றுகின்றன
உனது விரல்களும்,
அதன் ஊடாக நீயும்.!!"
-அன்றில்
L

No comments:

Post a Comment