Sunday, 24 August 2014

"அப்பத்தாவுக்கு வாதம் வந்ததிலிருந்து, ஐயா தான் குளிப்பாட்டுதல்,சீலைத் துவைத்தல் எல்லாம். அப்பத்தா கண் ஆபரேசன் பண்ணி, தடித்தக்கண்ணாடி போட்ட காலத்திலிருந்து சமையலும் இவரே. சாயந்திரமா வெந்நீர் விளாவி குளிப்பாட்டிவிட்டு, இரவில் துணி துவைப்பார். ஆம்பளை பொண்டாட்டி சீலைத் துவைக்கிறானு ஊர்ல எவனாவது சொல்லுவானு இரவில் துவைத்ததாகச் சொல்வார். ஒருகட்டத்தில், நம்ம பொண்டாட்டி சீலைய, நாம துவைக்க எவன் என்ன சொல்றதுன்னு பகலில் துவைக்க ஆரம்பித்தார். கொடியில் கலர் கலரா நூல் சீலை காயுறப்ப, குளித்த அப்பத்தா சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும்.பின்னால் அடுப்போடு மல்லுக்கட்டி ஐயா எழுப்பும் புகை மெல்ல மெல்ல மேகம் நோக்கிப் போகும் கணம் சமைந்தது போல மனசில். அப்பத்தா கட்டும் கோபுரக்கரைச் சீலை மெதுமெதுப்பானவை. அப்பத்தா போனதிலிருந்து ஜமுக்காளத்தின் மேல் சீலை விரித்து தான் அவர் படுப்பார். அது வெறும் மெதுமெதுப்புக்காக மட்டுமல்ல.!!"

No comments:

Post a Comment