Saturday, 16 August 2014

“பள்ளியின் வாசலில், அரச மரத்தடியில்
நாவற்பழம் விற்கிறார் அவர்.
நாவல் போல் கனிந்த முகம்
சிறுமி முன் நிற்கையில்.
எனக்கு மகிழ்ச்சி 
இன்னும் நாவற்பழம் விற்பதை
தொழிலாய் பாவிக்கும் ஒருவரும்,
வாங்கித்தின்ன ஆளும் இருப்பது.
கன்னத்தில் பழம் அதக்கி, கொட்டைகளை
அவள் துப்பிக்கொண்டு சென்றது
பால்யம் என்மீது துப்பப்படுவது
போலிருந்தது.
குனிந்து ஒருகொட்டையெடுத்து
உள்ளங்கையில் வைத்துக்கொண்டேன்.
அவர் சிரித்தது
‘அவ்வாறு தான் சேகரித்த கொட்டையொன்றில்,
விளைந்தவை அப்பழங்கள்’
எனும் போலிருக்கிறது.!!”

-அன்றில்

No comments:

Post a Comment