Friday, 1 August 2014

"உன்மீதான எனதன்பை எங்ஙனம் குறைத்து மதிப்பிட்டாய்?
ஆழியை அளக்கும் அசட்டுத் துணிச்சல் உனக்கெதுக்கு?
வெப்பமாதலின் பொருட்டு ஆவியாகின்றன என் வருத்தங்கள்.
வற்றாமல் அப்படியே தானிருக்கிறது கடல்.
கருத்து சூல் கொண்ட அடர் கார்மேகங்கள்
நகருகின்றன உன் மேலே எனது வானத்தில்.
புறக்கணிப்பின் எந்தவொருப் புள்ளியிலும்
பெய்யத் தொடங்குகிறது பேய்மழையாக!
துளிகள் ஒவ்வொன்றும் திராவகம்
தூரத்தே நடந்து செல்கிறாள்
குடைப் பிடித்தபடி ஒரு சிறுமி.!!"

-அன்றில்

No comments:

Post a Comment