“வளர்மதிக்கு யேசுதாஸ் ஆகவிருப்பம்.
அதிலும் பூங்காற்று புதிதானது உயிர்.
கையில் டிரான்சிஸ்டருடன் முற்றத்தில்
நடக்கையில் பூபாளம் இசைக்கும்.
அரைகுறையாய் சொருகிய தாவணியுடன்,
முட்டிக்கு மேல் பாவாடையை பிடித்தபடி
ஓடி வந்து விழுகையில்,
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
தாண்டியிருந்தது.
என் கால் விரலிடுக்கில் அவளின் முன்னம்பல் ஒன்று.
நொடி தவறினாலும் காற்றில் கரைந்திடுமென்பதால்
அவள் தவறவிடுவதேயில்லை
சிறு இசைத்துணுக்கையும்.
நேயர் விருப்பத்தில் அவள் பெயர் வாசித்த போது
அவளின் புதைமேட்டில் ஒரு ஆட்டிடையன்
புல்லாங்குழல் வாசிக்கிறான்.
காற்று வீச, கதவசைய
முற்றத்தில் யாரோ நடப்பது போலிருந்தது.!!”
-அன்றில்
அதிலும் பூங்காற்று புதிதானது உயிர்.
கையில் டிரான்சிஸ்டருடன் முற்றத்தில்
நடக்கையில் பூபாளம் இசைக்கும்.
அரைகுறையாய் சொருகிய தாவணியுடன்,
முட்டிக்கு மேல் பாவாடையை பிடித்தபடி
ஓடி வந்து விழுகையில்,
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
தாண்டியிருந்தது.
என் கால் விரலிடுக்கில் அவளின் முன்னம்பல் ஒன்று.
நொடி தவறினாலும் காற்றில் கரைந்திடுமென்பதால்
அவள் தவறவிடுவதேயில்லை
சிறு இசைத்துணுக்கையும்.
நேயர் விருப்பத்தில் அவள் பெயர் வாசித்த போது
அவளின் புதைமேட்டில் ஒரு ஆட்டிடையன்
புல்லாங்குழல் வாசிக்கிறான்.
காற்று வீச, கதவசைய
முற்றத்தில் யாரோ நடப்பது போலிருந்தது.!!”
-அன்றில்
No comments:
Post a Comment