Friday, 1 August 2014

"மறுதலிப்பின் முடிவில் மௌனித்து
திரும்பி நடக்கின்றேன்.
பின்னால் வருகிறது உன் நினைவென்னும்
ஓநாய்.
எந்தவித பிரக்ஞையுமின்றி போய்க் கொண்டிருக்கின்றேன்
மரணித்தலின் மறுபுள்ளியில் பயம் ஏது?
பசி தீர்ந்து வெளியேறியது அந்நாய்
உயிர் மட்டும் மிச்சம் வைத்து.
ஏதேனும் ஒரு இரயில் நிலையத்தில்
நீ காணக்கூடும் இந்த
உயிர்ப்பிண்டத்தை.
நீயும் இட்டுச் செல்வாய் பிச்சையை
முகம் பாராமல்.!!"

-அன்றில்

No comments:

Post a Comment