வெறுப்பின் துளி வழிகிறது
முதுகுத்தாரையில்
அமைதியாய்ச் சிரிக்கிறது
தொட்டிப்பூ.
முத்த நட்சத்த்திரங்கள்
இறைந்துக்கிடக்கும் முற்றத்தில்
உலர்ந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி
தேடிக்கொண்டிருந்தாள்.
ஞாபகப்பறவை பறக்கிறது
மனதெங்கும்.
மெல்லத் தலை தடவ
கண்கள் செருகிப் பார்க்கிறது
பூனை.
மெல்லிய சிலந்திநூலென
இழைகிறது நேசம்.!!
முதுகுத்தாரையில்
அமைதியாய்ச் சிரிக்கிறது
தொட்டிப்பூ.
முத்த நட்சத்த்திரங்கள்
இறைந்துக்கிடக்கும் முற்றத்தில்
உலர்ந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி
தேடிக்கொண்டிருந்தாள்.
ஞாபகப்பறவை பறக்கிறது
மனதெங்கும்.
மெல்லத் தலை தடவ
கண்கள் செருகிப் பார்க்கிறது
பூனை.
மெல்லிய சிலந்திநூலென
இழைகிறது நேசம்.!!
பறக்கும் பறவையின் சிறகடியில்
ReplyDeleteஉதிர்ந்து போகட்டும் அவள்
சோகங்கள் எல்லாம்.....அருமை சகோ...